உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ கவியரசர் முடியரசன் 217 செய்துள்ளார். அவர் உதவி கிட்டாதிருப்பின் நீ எவ்வளவு துன்புற்றிருப்பாய்! துணையின்றித் தன்னந்தனியாய் நோய் வாய்ப்பட்டுத் துன்புற்ற அச் சூழ்நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அவ்வுதவியின் பெருமை 'நன்கு புலனாகும். அவர், உன்னிடம் எதையாவது எதிர்பார்த்தா அவ்வுத வியைச் செய்தார் ? இது செய்தால் இன்னது கிடைக்கும் என்று பயன் கருதியா செய்தார் ? அன்று. அன்புள்ளம் கொண்ட ஒரே காரணத்தால், தன்னுயிர்போல் மன்னுயிரை மதிக்கும் நல்லுணர்வு பெற்றிருக்குங் காரணத்தால், பிறர் துன்புறுவதைக் காணப் பொறுக்காத இளகிய நெஞ்சம் வாய்த்திருக்குங் காரணத்தால் உனக்குத் துணையாக நின்றுதவியுள்ளார். இவ்வாறு பயன் கருதாது செய்யப்படும் உதவியின் நன்மை கடலினும் பெரிது தம்பி. பயன் கருதி அவர் உதவி செய்யவில்லை. சரி; இதற்கு முன்பாவது நீ அவருக்கு ஏதேனும் உதவி செய்ததுண்டா ? அதுவும் இல்லை. இனிமேலும் செய்யத்தான் முடியுமா ? கைம்மாறாகக் கொடுக்க நினைத்தால் விண்ணுலகையும் மண்ணுலகையுங் கொடுத்தாலும் அவை அவ்வுதவிக்குச் சமமாகுமா? அவ்வுதவிக்குக் கைம்மாறே இல்லை. எவ்வகைக் காரணமுமின்றிச் செய்த புதவிக்கு என்னதான் கைம்மாறு செய்ய வியலும் ? காலத்திற் செய்த_வுதவி, கைம்மாறு கருதாது செய்தாவுதவி, காரணமின்றிச் செய்த_வுதவி ஆகிய இவற்றின் நன்மை அளவிட முடியுமா ? இவை உலகைவிட, கடலை விட, வானைவிடப் பெரியனவாம்.