உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பு, கல்வி, ஒழுக்கம், பருவம் முதலிய தகுதிகளையும் பேசுபவர் தம் தகுதிகளையும் இணைத்துப் பார்த்து, அவற்றிலுள்ள ஏற்றத் தாழ்வுகளை யறிந்து, அவற்றிற் கேற்பப் பேசுதல் வேண்டும். அஃதாவது அவையறிந்து பேச வேண்டும்; அவைக் கேற்பப் பேச வேண்டும்; அவை யிலுள்ளவர்கட்கு ஏற்ற வகையில் பேச வேண்டும். இக்கோட்பாட்டைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டு அவையோர் கொண்டுள்ள கருத்திற்கேற்பத் தங்கருத்தை விட்டொழித்து, உண்மைக்கு மாறாகப் பேசி விடுகின்றனர். அது தவறு. எங்கும், எப்பொழுதும், எந்தச் குழ்நிலையிலும் தம் கருத்தைக் கைவிடுத்துப் பிறர் கருத்தின் பின்னே செல்லுதலைச் சான்றோர் விரும்பார். அவையறிந்து பேசுதலா வது, அவையோர் இளைஞரா முதியரா என்றும், கற்றோரா நற்றோரா என்றும் ஆய்ந்து குறிப்பறிந்து அவரவர் நெஞ்சம் ஏற்றுக்கொள்ளத்தக்க கருத்துகளை அவரவர் புரிந்துகொள்ளத்தக்க நடையில் பேச வேண்டும் என்பதே பாகும். கற்றுத் தேர்ந்த அறிவு முதிர்ச்சி பெற்ற பேரவையில் iளிய கருத்துகளை எளிய நடையில் பேசுவது முறையோ? இளைஞர் முன்னிலையில் அரிய கருத்துதிகளைக் கூற நேரினும், அவற்றை எளிமையாக்கி நகைச்சுவையுடன் கலந்து அவருள்ளங் கொள்ளும் வகையில் பேச வேண்டும். ஆராய்ச்சிக் கருத்துகளை அவர் முன்னிலையில் பேசுவது முறையன்று. இதுதான் அவையறிந்து பேசுவதாகும்.