பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... இவ் வண்ணம் தன் திறனும் அவையின் திறனும் அறிந்து ஒன்றைச் சொல்லுங்கால் அதனினும் மேம்பட்ட அதனை வெல்லத்தக்க வேறோர் சொல் இல்லாத வகையில் ஆய்ந்து சொல்ல வேண்டும். அஃதாவது உயர்ந்த கருத் துகளை, அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையாற் கூற வேண்டும்; அவற்றினுஞ் சிறந்ததாகப் பிறிதொன்றை மற்றையோர் எடுத்துக்)கூறா வகையால் அனைத்தினுஞ் சிறந்ததைத் தான் எடுத்துக் கூற வேண்டும் என்பதாம். அவைக்கு அஞ்சாமலும், கற்றார் பலராகக் கூடியிருப்பினும் ஒன்றையும் மறவாமலும், பிறர் ஏற்கும் வகையாற் சொல்லு தலில் வல்லவனாகிய ஒருவனை எவராலும் வெல்ல முடியாது. இத்தகையான் சொல்லை வெல்லுஞ் சொல் ஒன்றும் இல்லையாகிவிடும். இவன் சொல்லே வெற்றி கொண்டு நிற்கும் என்பதாதிம். சொல்வன்மை, உலகத்தையே தன்வயப்படுத்தி: கொள்ளும் பேராற்றல் கொண்டதென்று தொடக்கத்தி: எழுதினேன். சொல்வன்மையைக் கையாளும் முறையிற்றால் அவ்வாற்றல் அமைந்து கிடக்கிறது. உலகில் யார் யாரோ பேசுகின்றார்கள்; அவருடைய சொல்லுக்கெல்லாம் இந்த ஆற்றல் இருக்கின்றதா ? இல்லை; ஒரு சிலர் சொல்லுக்கே அவ்வாற்றல் அமைந்திருக்கிறது. அவர், தாம் சொல்ல வேண்டியவற்றை முன் கூட்டியே சிந்திக்கின்றனர். சிந்தித்து இன்னின்னவற்றைக் கூறவேண்டும் என்று முடிவு செய் கின்றனர். முடிவு செய்து, அவற்றுள் முதலிற் கூறவேண்டி