பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TT T அன்புள்ள பாண்டியனுக்கு... - - __ --- குறிப் புகளே மலிந்து கிடக் கும். இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். திரு.வி.க. வரலாறு, நாட்டு வரலாற்றோடு பின்னிப் பிணைந்திருப்பது; நாமுங் கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டியது. அவர் வரலாற்றிலிருந்து நீ கற்றுத் தெளிந்து பின் பற்ற வேண்டிய பண் பொன்றினை உனக் கெழுத விரும்புகின்றேன். அவர் ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர்; தாய்மொழிப் புலமையும், பிறமொழிப் புலமையும் நிறையப் பெற்றவர்; நாநலம் மிக்க நாவலர்; கற்றாரும் மிக்காரும் ஒருங்கே போற்றும் புகழ்ச் செல்வம் படைத்தவர். நாட்டுப் பெருந்தலைவருள் ஒருவர்; தந்நேரிலாத் தகைமை யாளர். இத்துனைப் பெருஞ் சிறப்புகளுக்குரியவ ராயினும் அவரிடத்தே சிறிதேனும் செருக்குனர்வைக் காண முடியாது. பணி வின் திருவுருவமாகவே விளங்கு வார். சுருங்கக் கூறின் குண மென்னுங் குன்றேறி நின்றவர் அவர். தம்மினுஞ் சிறியாரிடத்தும் பணிவு காட்டும் பண்பினர். ‘என்றும் பணியுமாம் பெருமை’ என்னும் மறைமொழிக்கு இலக்கியமாய் விளங்கிய வர். இப் பணி வினால் உயர் நிலையே எய்தினார். இத்தகைய பணிவினை நீயுங் கைக்கொண்டொழுக வேண்டும். கல்வியும் புகழும் ஒரு புறம் வளர வளர, நம்மையறி யாமலேயே மறுபுறம் செருக்குணர்வும் வளர்ந்துகொண்டே வரும். இஃது இயல்பு. நாம் விழிப்பாக இருந்து அவ் வுணர்வை வளர விடாமல் தடுத்துக் கொள்ள வேண்டும்.