பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 அன்புள்ள பாண்டியனுக்கு... தீயினாற் சுட்ட புண் ஆறிவிடும். ஒருவேளை, உடலில் புண்ணாகவே தோன்றினும் உள்ளத்தின்கண் ஆறிவிடும். ஆனால், நாவினாற் சுட்ட புண், வடுவாகவே நின்று, மனத்தின்கண் ஆறவே ஆறாது. ஆகவேதான் நாவடக்கம் இன்றியமையாது வேண்டப் படுவதாகிறது. . அடுத்து மனவடக்கம் என்றால் என்ன என்பதையும் எழுதுகிறேன். அளவுக்குமேல் ஆசை கொண்டு மனத்தை அலையவிடாமலும், வெகுளி சிறிதுகூடத் தோன்றாமலும், கல்வியறிவால் நிறைந்து, அடங்கி வாழ்வதுதான் மனவடக்கம் எனப்படும். இம் மனவடக்கம் உடையவனிடத்து, அறம் தானே வந்து சேரும். ஆதலின் மனம், நா., மெய் இம்மூன்றானும் அடங்கி முற்றி வளர்ந்த பயிர் போலப் பணிந்து வாழப் பழகிக்கொள். பணிந்து நடந்தால் உயர்வு பெறுவது உறுதி. "எல்லார்க்கும் நன்றாம் பணிதல்; அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து” இங்ங்னம், அறிவுடை நம்பி.