பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.7 ===م கவியரசர் முடியரசன் -- 233) கொள்ளவும் வல்லமை பெற்றிருக்க வேண்டுமென்பதுதான் கருத்து. இவ்வைந்து பொறிகளையும் தி நெறிகளிற் செலவிடாது. நன்னெறிகளிற் செலுத்தி, அதுவும் அளவோடு செலுத்தி வாழ்வதைத் தான் மெய்யடக்கம் என்று சொல்லுகிறோம். இனி நாவடக்கத்தைப் பற்றி எழுதுகின்றேன். உலகத்தில் நம் வாழ்க்கையில் நம்மாற் காக்கப்பட வேண்டிய பொருள்கள் பலவுள. அவ்வாறு காக்கப்பட வேண்டிய பலவற்றைக் காவாது விடினுங் குற்றமில்லை. ஆனால், நாவினை மட்டும் காத்துக் கொள்ள வேண்டும். நாவினைக் காவாதுவிடின், நாம் சொல்லுஞ் சொல்லின்கண் தோன்றுங் குற்றத்திற்காட்பட்டு நாமே துன்புற நேரிடும். நாவை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் எழுதுகிறேன். மற்றவர்க்குத் தீங்கு பயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் முதலியனவற்றைக் கூறாது நாவைக் காத்துக்கொள்ள வேண்டும். நம் சொல் பிறர்க்குத் தீங்கு பயக்குமானால், வேறு பிற அறங்களாற் பெற்ற நன்மைகளும் தீமைகளாகவே முடியும். பெருந்தலைவர் களாக நம்மால் மதிக்கத் தக்கவர்கள் கூடச் சிற் சில வேளைகளில் நாவைக் காத்துக்கொள்ளாமல், உணர்ச்சி வயப்பட்டுப் பேசிவிட்டுப் பின்னர் அவர்கள் படும்பாட்டையும் நாம் பார்த்திருக்கிறோம். அதனால் நாவைக் காத்துக் கொள்ளுவதிற் கண்ணுங் கருத்துமாக இருக்கவேண்டும்.