பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள பாண்டியனுக்கு... (232T – __ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - - - - அடங்கி வாழக் கற்றுக் கொண்டவனுடைய உயர்ச்சி, மலையின் உயர்ச்சியைவிடப்பெரிதாகும். இத்தகைய பணிவுடைமையை, அஃதாவது அடக்க முடைமையை மூன்று வகையாகப் பாகுபாடுசெய்யலாம். ஒன்று மெய்யடக்கம். இரண்டு நாவடக்கம். மூன்று மன வடக்கம். இம்மூன்று அடக்கங்களும் ஒருவனுக்கு இன்றியமையாது வேண்டப்படுவனவாகும். வாழ்விற் சிறந்து விளங்க, இவை துணை செய்யும். ஆமையைப் பார்த்திருக்கிறாயல்லவா? அது, தனக்கொரு தீங்கு வருவதை அறியின் உடனே தன் ஐந்துறுப்புகளையும் உள்ளடக்கிக் கொள்ளுகிறது. அதனால் எவ்விடரும் புகாவண்ணம் தன்னைக் காத்துக் கொள்ள முடிகிறது. அதுபோல மனிதனும் தன் ஐந்து பொறிகளையும் அடக்கிவாழக் கற்றுக்கொள்ளவேண்டும். அடக்கிவாழ வேண்டுமென்றால் அடியோடு ஐம்பொறிகளையும் அடக்கிப் புலன் நுகர்ச்சியே இல்லாமல் வாழ வேண்டுமென்று கூறுவதாகக் கொள்ளுதல் தவறு. அஃது உலகியலுக்கு ஒத்துவராத செயலாகும். ஆமை எப்பொழுதுமா தன் ஐந்துறுப்புகளையும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது ? வேண்டுங்காலத்து வெளியில் நீட்டிக் கொள்ளவும், துன்பம் நேருங்கால் அடக்கிக் கொள்ளவும் வல்லதா யிருக்கிறது. அதுபோல. மனிதனும் வேண்டுமளவு ஐம்பொறிகளையும் ஐம்புலன்கள் மேற் செலவிடவும், குற்றம் நிகழுமெனத் தெரிந்தால் அப்பொறிகளை அடக்கிக்