உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s236 o - – - அன்புள்ள பாண்டியனுக்கு. நிறைந்த செல்வம் பெற்றிருக்கும் காலத்துப் பணிவுடைமை கொண்டிருந்தால் அது போற்றப்படும்; பாராட்டப்படும். பணி வுடைமை நல்ல பண்பாகும் என்பதற்காக, நாம் வறுமை யுற்றிருக்குங் காலத்திலும் பணிந்து விடுதல் கூடாது. அப்பொழுது பணியா மைதான் வேண்டும். செல்வ ஞ் சுருங்கிய காலத்துப் பணிந்து நடந்தால் உலகம் நம்மை இகழ்ந்து பேசும். வயிற்றுப் பிழைப்புக்காக இவ்வாறு அடங்கி ஒடுங் கி நடக் கின்றான் என்று ஏ ள ன ஞ் செய்யுமே தவிர, உயரிய பண்பாளன் என ஒருபோதும் உரைக்காது. வறிய காலத்துப் பணிந்து நடப்பது நம் மானத்திற்கு ஊறு விளைவிப்பதாகவே முடியும். அதனால் மானத்தை மதிப்போர், வளமிழந்து வாழுங் காலத்துப் பணியாது நின்று, உயர்வொன்றையே ஒம்பி நிற்பர். ஆதலின் மானத்தைப் பற்றி இக் கடிதத்தில் எழுத முற்படுகிறேன். உயிருஞ் சிறந்தது; மானமுஞ் சிறந்தது. இரண்டுமே ஒவ்வொருவராலும் ஒம்பப்பட வேண்டியவையாகும். ஆயினும் இரண்டுக்கும் ஒரு குறை ஏற்படுகிற சூழல் ஏற்பட்டுவிடுகிறது. அவ்விரண்டுக்கும் மோதல் உண்டாகும் ஒரு நிலை தோன்றி விடுகிறது. அஃதாவது இரண்டி லொன்றை விட்டுவிட வேண்டிய நிலை ஒன்றை விட்டால் மற்றொன்று நிலைக்கும் நிலை வந்துவிடுகிறது. அப்பொழுது எதை விடுவது ? எதை வைத்துக் கொள்வது ? உயிரை விடுத்து மானத்தைப் போற்றுவதா ? மானத்தை விடுத்து