பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| கவியரசர் முடியரசன் - 237 | உயிரைக் காத்து வாழ்வதா? இஃது இக்கட்டான சமயம் மட்டுமன்று; இக்கட்டான வினாவும் ஆகும். இரண்டுமே சிறந்தவைதாம். எப்படி இவ்வினாவிற்கு விடைபகர்வது? தடுமாற்றத்தை உண்டாக்கும் இவ் வினாவிற்கு விடையும் உண்டு. விடை இரண்டு வகைப்படும். உயிரை விடுத்து மானத்தைக் காப்பது ஒன்று மானத்தை விட்டு உயிரைக் காப்பது மற்றொன்று. தமிழ் நூல்கள் கூறும் விடை ஒன்று. வடமொழி நூல்கள் கூறும் விடை மற்றொன்று. உயிரைவிட்டு மானத்தைக் காக்க வேண்டுமென்பது தமிழ் நூல் தரும் விடை. "இறப்ப வருவழி, இளிவந்தன செய் தாயினும் உய்க” என்பது வடநூல் தரும் மறுமொழி எனப் பரிமேலழகர் குறிப்பிடு கின்றார். ஆதலின் மானம் ஒன்றே மேம்பட்டதெனக் கொண்டொழுகுவதுதான் தமிழ் மாந்தரின் தலையாய கொள்கையாகும். மானம் என்றால் என்ன என்பதை இங்கே விளக்குவது நல்லதென்று கருதுகிறேன். எக்காலத்தும் எத்தகைய சூழ்நிலையிலும் தந் நிலையினின்று தாழாமையும், தாழ்வுவரின் உயிர் வாழாமையும், தங்குடிப் பிறப்புக்குத் தாழ்வுவருஞ் செயல்களைச் செய்யாமையும் மானம் என்று மறைமொழி பறை சாற்றுகிறது. புகழையும் மானத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்ற கொள்கையுடைய சான்றோர். தாம் பிறந்த குடிக்குத் தாழ்வுதரும் இழிவான செயல்களைச் செய்யவேமாட்டார்;