பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள அரசு, உன் கடிதம் கிடைக்கப் பெற்றேன். அங்கு நிகழ்ந்த திருக்குறள் விழா நிகழ்ச்சிகள் பற்றி யெழுதியிருந்தாய். நானும் செய்தித்தாளில் கண்ணுற்றேன்; களிப்புற்றேன். அறிஞர் அண்ணா, தவத்திரு. குன்றக் குடி அடிகளார். தமிழ்வேள். பி.டி. இராசன், மொழித்துறை வல்லுநர் தேவநேயப் பாவாணர், இன்னோரன்ன பெரியோர்கள் ஒரே மேடையில் கூடி நின்று உரையாற்றினர் என்றும், கருத்து வேறுபாடுகளைக் காட்டிக் கொள்ளாமல், ஒருவர் கருத்தை ஒருவர் தழுவியே பேசினர் என்றும் அக்காட்சி கண் கொள்ளாக் காட்சியாக இருந்ததென்றும் மகிழ்ச்சி பொங்க எழுதியிருந்தாய். அந்நிகழ்ச்சி உனக்கும் எனக்கும் மகிழ்ச்சி தருவதோ டன்றி நாட்டு மக்களில் நன்மனம் படைத்தோர் அனைவர்க்குமே