உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(24 __ _ 'அன்புள்ள இளவரசனுக்கு ெ --- - - - --- - --- - - மகிழ்ச்சி தரக்கூடியதுதான். தமிழகத்துக்கும் நல்ல காலம் தோன்றி விட்டது என்று எண்ணத்தோன்றுகிறது. ஒவ்வொரு வரும் தத்தம் திறமைகளைக் காட்ட வேண்டுமென்றோ கட்சிக் கொள்கைகளை நிலை நாட்டிவிட வேண்டு மென்றோ அவையில் கைதட்டல் வாங்க வேண்டுமென்றோ கருதாராய், மொழி முன்னேற்றம், நாட்டு நலம், இன ஒற்றுமை இவற்றை அடிப்படையாக வைத்துக் குறள் நெறி பரவ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை மனத்தில் உண்மையாக நிலை நிறுத்திப் பாடுபட வருவோர் எவருமே ஒன்று படத்தான் செய்வர். அவ்வாறு ஒன்றுபட்டுத் தொண்டு செய்வதுதான் அறிவுடைமையுமாகும். தன்னலம் தலை தூக்கிவிடின் பொதுநலங்கெட் டொழியும். நம் தலைவர்களிடையே - தொண்டர்களிடையே அரும்பி வரும் இப்பொதுநல மனப்பான்மை - பொது நன்மைக் காகச் சிறுசிறு கருத்து வேறுபாடுகளை விட்டொழித்து ஒன்றுபட்டு வரும் உள்ளப்பாங்கு வளர்ந்து, விரிந்து, பரந்து பயன் தருவதாக. - அரசு ! நம்மவர், தம்மிடையே இருந்துவரும் கருத்து வேறுபாடுகளைப் பெரியனவாக்கி, ஒருவரையொருவர் நேரிற்கான விழையாமல், தனி மனிதனைக் கண்டபடி ஏசிப் பிளவுபட்டு வருவதையே காண்கின்றோம். இதனால் அந்தப் பிளவுகளில் பகைமைகள் எளிதாக நுழைந்து வேர்விட்டுச் செழித்து வளர்கின்றன. நம் மொழிக்கும் நாட்டுக்குமே திங்கு நேரிடுகிறது. இதை உணராமல்-நாட்டையும் மொழியையும்