உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- க _ --- -- (கவியரசர் முடியரசன் முன் வைத்து எண்ணாமல், அவர் சொன்னார் அதனால் அது தவறு, இவர் சொன்னார் இதனால் இது சரியன்று என்று மறுத்துப்பேசி மாற்றார்க்கே இடமளித்து விடுகிறோம். எடுத்துக் காட்டாக ஒன்று சொல்லுகிறேன். கோவிலில் தமிழ் முழங்கவேண்டுமென்று காவிச் சட்டைக்காரர் சொன்னாலென்ன ? கருப்புச் சட்டைக்காரர் சொன்னாலென்ன ? எவர் சொன்னாலும் தமிழுக்குத்தானே சொல்கின்றனர் என்று கருதுதல் வேண்டும். இவ்வாறு எண்ணுவதை விடுத்துக் காவிச் சட்டை நமக்குப் பிடிக்க வில்லையென்றால் அவரைக் கண்டபடி பேசுகிறோம். நாத்திகர் என்று கூட நவிலுகின்றோம். அடடா! கோவிலுக்குள் தமிழா ? முன்னோர் முறையைப் புறக்கணித்து நடப்பதா ? தேவபாடையை விடுத்துத் தமிழைப் புகுத்தினால் பேரிழவல்லவா விளையும் ! என்றெல்லாம் பிதற்றுகிறோம். கருப்புச் சட்டை பிடிக்கவில்லையென்றால், ஆ. இவனா கோவிலைப் பற்றிப் பேசுவது? கடவுளையே ஒழிக்க வேண்டு மென்று பேசுபவனாயிற்றே இவன் தமிழின் பெயரைச் சொல்லிக் கோவிலுக்கு வெடிவைக்கப் பார்க்கிறான் என்று கதறுகிறோம். உண்மையில் சட்டையையும் ஆளையும் முன் வைத்துப் பேசுகிறோமே தவிர, மொழியை முன் வைத்துப் பேசுவதில்லை. மொழியை முன் வைக்காமல் ஆளை முன் வைத்துப் பேசுவதால் விளையும் பயன் என்ன? தமிழ் மொழி, தமிழ் நாட்டுக் கோவிலுக்குள் நுழைய முடியாத தாழ்த்தப்பட்ட