பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T - - 26 - அன்புள்ள இளவரசனுக்கு ...) மொழியாகி விடுகிறது. பிற மொழியின் ஆட்சியே நிலை நிற்கிறது. நம்மிடையே உள்ள பகையுணர்வால் நமக்கு நாமே நலிவுகளை உண்டாக்கிக் கொள்கிறோம். இத்தகைய பிளவு மனப்பான்மையை ஒழித்துவிட்டு, மொழியும் நாடும் முன்னேற வேண்டுமென்ற ஒரே குறிக்கோளில் நாம் முயலல் வேண்டும். வளர்ந்து வரும் பரம்பரை இவ்வெண்ணத்துடன் வளர்வதாகுக. அரசு ! பொதுவான செய்திகளையே எழுதி விட்டேன். நிற்க ! நீ உயர்நிலைப் பள்ளிப் பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் கல்லூரியில் இடம் பெறுவதற்குப் பட்ட பாட்டை நீ நன்கறி வாய். தகுதியில் லாரிடங் கூடக் கெஞ்சி நிற்க வேண்டிய நிலையாகி விட்டது. எல்லாம் உன் நன்மைக்குத்தான். நன்றாக நீ படித்து முன் னுக்கு வர வேண்டுமே என்ற எண் ணத்தி னாற்றான் தமிழை வெறுத்துப் பேசும் அந்தப் புல்லனிடமும் போக வேண்டிய தாயிற்று, தந்தை மகனுக்கு ஆற்றவேண்டிய பணியை என்னால் இயன்ற வரை ஆற்றுகிறேன். மகன், தந்தைக்கு ஆற்றும் உதவியை நீ மறந்து விடாதே. கல்வி பயிலுவதில் கண்ணும் கருத்துமாக இரு. == உடனுறை நண்பர்களிடம் பகைத்துக் கொள்ளாதே. நெருங்கியும் பழகி விடாதே. நெருங்காமலும் விட்டு விலகாமலும் பழகு. நல்ல நண்பர் கிடைப்பதரிது. ஆராய்ந்து பார்த்துப் பழகு. நல்ல நண்பர் ஒரிருவரே வாய்ப்பர். நல்ல நண்பர் கிடைத்து விட்டால் விட்டு விடாதே; ஒட்டிக்கொள். ஆசான் உரைத்ததை அப்படியே ஏற்றுக் கொண்டாலும்