பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் - SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS --- 35 தேவாரப் பெருமக்கள் குற்றாலத்து இறைவனை நினைந்து, தம்மை மறந்து, உள்ளுருகிப் பாடுங்கால், அங்கு ஆர்த்து வீழும் அருவியை, அசைந்தாடும் நறுமலரை, குளிர்புனற் சாரலை, கொழுமலர்ச்சோலையை, வானுயர் மரங்களை, வளந்தரும் இடங்களை யெல்லாம் மறந்தாரல்லர். அக்காட்சிகள் அனைத்தும் அவர்தம் அகக் கண்ணை விட்டகன்றில. அதனால் அக்காட்சிகளை அப்படி அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. அவர்தம் பாடல்கள். அவர்தம் பாடல்களில் அவ்வோவியங்களைக் காணும் பொழுதெல்லாம் நானும் குற்றாலத்தில் இருப்பதாகவே எண்ணி என்னையும் மறந்து விடுவேன். அருவி ஒசை செவியில் ஆர்க்கும்; மெல்லிய தென்றல் என் நல்லுடல் வருடும். மழலை வண்டினம் நல்லியாழ் செயும். விரிமலர் பலப்பல நறுமணம் வீசும். இத்தனையும் என் கற்பனையில், கற்பனை கலைந்ததும் தன்னினைவு தலை தூக்கும், கவல்வேன்; அயர்வேன், அக் காட்சிகளை என்று காண்பேன் என்று. ஆண்டுச் சென்று திங்கட் கணக்கில் தங்கித் தூய நல் லுடலோடு மீளும் பெருமக்கள் அக் குற்றால வளத்தையும் நலத்தையும் வியந்து வியந்து பாராட்டுவதையும் கேட்டிருக் கின்றேன். இக் கேள்வியும் என் ஆவலைக் கிளர்ந்தெழச் செய்யும். கிளர்ந்தெழுந்த எண்ணம் வளர்ந்து வளர்ந்து பயன்தந்து விட்டது தம்பி. அண்மையில் குற்றாலம் சென்று வரும் வாய்ப்புப் பெற்றேன். வற்றாத இன்பங் கண்டு வாரி வாரி உண்டு மகிழ்ந்தேன் களித்தேன். இப் பருவத்துக்கு ஆங்கே வந்தார் அனைவருள்ளும் நானே பெரும் பயன் பெற்றேன் என்று பெருமிதத்தோடு