பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‛ኣ s36 - அன்புள்ள இளவரசனுக்கு ...) வரைகின்றேன். வானமுகட்டை முத்தமிடும் மலை முகடுகள், அம் முகட்டில் தவழ்ந்து செல்லும் முகிற்கூட்டங்கள், அம் முகில்கள் அகங் குளிர்ந்து பொழியும் மழ்ைத் துளிகள், துளிகள் ஒன்று திரண்டு விழும் தூய வெள்ளருவி, அருவியால் வளம் பெறுங் காடுகள், சோலைகள், வயல்கள், இவை தந்த பசுமை இவ் வனைத்தையும் என் கண்ணாரக் கண்டேன், கண்டேன் என்று சொல்வதினும் கண்களால் உண்டேன் என்று சொல்வது மிகப் பொருந்தும். மலை உச்சியிற் பெய்த நீர் ஒன்றாகிப் பச்சிலைகளில் உராய்ந்து, ஒடி வந்து, மலைச்சரிவுகளில் முழங்கி, இறங்கும் அவ்வருவிகளில் ஒயாது குளித்தேன். தண்டுளிச் சாரலோடு வீசுந் தென்றற் காற்றத்தனையும் என் உடற்குள்ளேயே புகவிட்டேன். சட்டையிட்டு உடலை மூடினேனல்லேன். நீ மழலை மொழிக் குழவியாக இருந்த பொழுது என் மார்பிலும் தோளிலும் எவ்வாறு தவழ்ந்தோடி விளையாடினையோ அதைப் போலவே தென்றலையும் என் மீது தவழ்ந்தாடவிட்டேன். சுருங்கக் கூறின் தென்றற் காற்றில் முங்கிக் குளித்தேன் என்றுதான் கூறுதல் வேண்டும். இயற்கையின் எழில் கண்டு, குளிரருவிப் புனல் படிந்து, மலர் மனத்தை அள்ளி வரும் தென்றல் நுகர்ந்து என் கவலையெல்லாம் களைந்து பேரின்பத்தில் திளைத்திருந்தேன். அதனால் ஒராண் டு க்கு மேலாக என் நெஞ் சின் வலப் பக்கத்தில் நிலைத்து நின்று என் உயிரை வதைத்து வந்த அந்த வலியும் பெரும்பகுதி நீங்கப் பெற்றேன். இன்னும் சின்னாள் தங்கியிருப்பின் அவ் வலி அறவே நீங்கப் பெற்றிருப்பேன். ஆனால் நான் ஏற்று நிற்கும் பொறுப்பு, கடமை அங்கே தங்கவிடவில்லை. ஊருக்குத் திரும்பினேன்.