பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கவி யரசர் முடியரசன் - 37) பொறுப்புள்ள நாட்டுக்கு நன்மை தரத் தக்க, நாட்டின் உயர்வுக்கே உயிர் நாடியான அலுவல்களில் ஈடுபட்டிருப்போர் நோய்வாய்ப்படின் அந்நோய் நீக்கத்துக்காக ஒரிரு திங்கள் விடுப்பளித்து, அவர்களைக் குற்றாலம் போன்ற உடல்நல நிலையங்களுக்கு உய்த்து வேண்டிய உதவிகளும் செய்துதர நம் அரசியலார் முயல்வாராயின் நாட்டுக்குப் பெரும் நன்மையாகும். இவ்வாறு செய்யின் அம் மக்கள், இழந்த வலிவை மீட்டும் பெற்று, அப்பணியில் நன்கு உழைப்பதற்கு வாயிலாக இருக்கும். அந்நாள் எந்நாளோ ? என்னைத் தொல்லைப்படுத்தி வந்த நோய் நீங்கி, இன்பம் பெற்றமையாற்றான் பெரும்பயன் பெற்றேன் என்று எழுதினேன். மேலும் எத்தனைப் பேர் நான் கூறிய இயற்கைக் காட்சிகளைக் கண்டு, எழில் நலம் நுகர்ந்திருப்பர்? பெரும் பகுதியும் இரார் என்றே எண்ணுகின்றேன். பெருஞ்செல்வரே மிகுதியும் செல்கின்றனர். ஏதோ நீராடி விட்டு, நல்லுணவு உண்டு, களியாட்டம் ஆடிக் காலத்தைக் கழித்து மீள்கின்றனர். அவர்தம் செல்லுச் செழிப்பைக் காட்டிக்கொள்ள வருகின்ற னரே அன்றி, இயற்கை இன்பத்தில் திளைக்க வருவதாகத் தோன்றவில்லை. இன்னுஞ் சிலரோ புண் ணியத் தலம் போய் வந்தோம்; நம் பாவங்களைக் கழுவி விட்டு வந்தோம்’ என்று புண்ணிய பாவக் கணக்குப் போடுவர். இன்னுஞ் சிலர் நிலைதான் இரங்கத் தக்கது. அருவியில் நீராடுவதைப் புண் ணியத் தீர்த்தத்தில் நீராடுவதாக எண்ணிக் கொண்டு தலையை மட்டும் அருவியிற் காட்டி உடனே |ழுத்துக் கொண்டு ஓடி வந்துவிடுகின்றனர். நல்ல \