பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளாமல் தலையையாவது நனைக்கின்றார்களே ! சிலர் ஒரு நாள் மட்டும் நீராடி மீள்கின்றனர். இவரெல்லாம் புண் ணிய நோக்கத்திற்காகச் செல் வோர். நோக்கம் தவறென்று சொல்ல வரவில்லை. இவர்தம் அறியாமையைக் கண்டே இரங்குகின்றேன். ஒரு நாளில் என்ன பயன் காணல் கூடும் ? இவர்களைப் பெரும் பயன் பெற்றார் என்று எவ்வாறு கூறுதல் இயலும் ? ஆகவேதான் நானே பெரும் பயன் பெற்றேன் என்று எழுதினேன். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் அய்ம்புல இன்பங்களையும் நான் பெற்றேன். தம்பி ! நான் பெற்ற இன்பத்தையே எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்த இன்பம் அப்படி என்னை எழுதத் துண்டுகிறது. இருப்பினும் குற்றாலக் காட்சி, அமைப்பு இவற்றையும் எழுதுவேன். எழுதும் பொழுதே இடையிடையே உனக்கு வேண்டிய அறிவுரைகளையும் எழுதுவேன். மதுரையிலிருந்து இரவு இரண்டே முக்கால் மணியளவில் புறப்படும் தொடர் வண்டிக்குச் சென்றோம். வண்டி புறப்படும் நேரத்திற்குத்தான் செல்ல வேண்டிய தாயிற்று. அதனால் படிகளில் ஏறி இறங்கும் போது தட்டுத் தடுமாறி, கீழே விழுந்து விடாமல், தொடர் வண்டி நிற்கும் இடத்தையடைந்தோம். வண்டியில் நுழைய இடமில்லை. எப்பொழுதுமே வண்டி புறப்படுவதற்கு முன் குறைந்தது அரைமணி நேரத்திற்கு முன்பே சென்று நிலையத்தில் இருக்க வேண்டும் என்று உன்னிடம் பலமுறை சொல்லியிருக்கின்றேன் அல்லவா ? ஆனால் அறிவுரை சொல்லும் நான் இப்பொழுது