பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(கவியரசர் முரசன்-39) - – – தவறிவிட்டேன். சொல்வது எளிது; செய்வது அரிது. சொன்னபடி செய்திருந்தால் எளிதாக இடங்கிடைத்திருக்கும். நம் மக்களுக்கு வண்டியில் ஏறவும் தெரிவதில்லை; இறங்க வுந் தெரிவதில்லை. வரிசையாக ஏறவேண்டுமென்றோ உள்ளிருப்போர் இறங்கிய பின் ஏற வேண்டுமென்றோ இவர்கள் உணர்வதுமில்லை. ஒழுங்கு முறையைப் பின் பற்றி நடந்தால் பொருள் இழப்போ உடல் வலியோ வேறு பிற தொல்லைகளோ ஏற்படா. அடிதடிகளும், சண்டை சச்சரவுகளும், வசவுகளும் விளையா. மூன்றாம் வகுப்பில் ஏறும் மக்கள் அன்று மக்களாக நடந்து கொள்ளவில்லை. விலங்குத் தன்மைதான் நிலவக் கண்டேன். மூப்படைந்தோர் ஏற வழியின்றித் தடுமாறினர்; மாதர் தவித்தனர். இரண்டொருவர் கீழே விழவும் செய்தனர். குழந்தைகள் நெருக்கடி தாங்க மாட்டாமல் வீரிட்டழுதன. பொருள்கள் பறிபோயின. لuته ஒழுங்குமுறை நமக்கு இன்னும் விளங்கவில்லை. உரிமை பெற்ற நாட்டில் வாழ்கிறோம் ! இவ்வளவு கூட்டத்திற்கும் காரணம் வில்லிப்புத்துாருக்கு அருகில் ஒரு திருவிழா நடைபெறுவதுதான். இதையறிந்தாவது நிலையத் தலைவர் இரண்டொரு வண்டிகளைத் தொடுத்திருக்கலாம். அதுதானுஞ் செய்தாரல்லவர், மூன்றாம் வகுப்பில் இடங் காணாக் காரணத்தால் நானும் நான் குற்றாலஞ் செல்ல உதவியாக இருந்த நண்பர் மகாலிங்கமும் இன்னுஞ் சிலரும் இரண்டாம் வகுப்புக் கட்டணம் செலுத்துவதாக வண்டிக் காப்பாளரிடம் ((IUARD) சொல்லிவிட்டு இரண்டாம் வகுப்பில் ஏறினோம்.