பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - (äyčDT) - அக்காட்சிகளைப் பார்த்தோம். வயல் நிரம்ப இருந்த முற்றா இளநாற்றுகள் மஞ்சள் கலந்த பசுமை நிறத்தை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கின. மென் காற்று அவற்றின் மீது உராய்ந்து செல்லுங்கால் அவை வளைந்து அசையுங் காட்சி, மெல்லிய பசிய ஆடை காற்றில் துவள்வது போன்றிருந்தது. சிறிது தொலைவு சென்றதும் அம் மென்காற்று, சிறுசிறு நீர்த்துளிகளைத் தூவியது. அது எங்களைப் பனிநீர் தெளித்து வரவேற்பது போல இருந்தது. அவ்வரவேற்பினால், தொடர் வண்டியிற் பட்ட தொல்லையும் வண்டியிலுற்ற வலியும் மறந்து குற்றாலத்தை அடைந்தோம். அரசு ! கடிதம் நீள்கிறது. அதனால் குற்றலாக் காட்சி பற்றியே அடுத்த கடிதத்திலும் எழுதுவேன். எனக்கும் நேரம் ஆகிறது. என் அலுவலுக்குச் செல்ல வேண்டு மல்லவா ? காலம் பொன்னிலும் சிறந்தது. ació/ தவறுவதும் கூடாதல்லவா ? ஆதலின் அடுத்து, மலைக் காட்சியையும் வளத்தையும் பிறவற்றையும் விளக்கி எழுதுவேன். உன் தந்தை, 22.08.1956 முடியரசன்