பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்குளிரும் குற்றாலம் | அன்புள்ள அரசு, உன் கடிதம் கிடைத்தது. 'குற்றாலம் சென்று வந்தமை குறித்து எழுதிய தங்கள் கடிதம், குற்றாலம் சென்றுவர வேண்டுமென்ற ஆவலைத் துாண்டுகிறது. எங்கள் கல்லூரி மாணவர்கள் விடுமுறையில் சுற்றுலா செல்ல முடிவு செய்துள்ளனர். சுற்று லா விற்கு ஏற்ற இடமாக க் குற்றாலத்தையே தேர்ந்தெடுத்துள்ளனர். நானும் உடன் சென்று வரக் கருதுகின்றேன். நீங்கள் உடன்பாடு தெரிவிப்பி ன் நானும் பெயர் கொடுத்து விடுவேன்' என்று எழுதியிருக்கின்றாய். மகிழ்ச்சி, நான் குற்றாலத்தின்பம் நுகருங்காலை, ஒரு முறை நம் குடும்பத்துடன் வந்து தங்கி அளவளாவி, யான் பெற்ற இ ன் பத் தைப் பகிர்ந்து நுகர்தல் வேண்டுமென்று முடிவு செய்தேன். அதனால் நீ சென்று வருவதில் எவ்விதத் தடையும் இல்லை. சென்று வரலாம். நான் எழுதும் அறிவுரைகளை மனத்தில் நிலை நிறுத்திக்