பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| கவியரசர் முடியரசன் பட்டும் நீராடுவதற்கு இரண்டனா கொடுக்க வேண்டும். காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ் வருவாயைக் கொண்டு அருவியை இன்னும் செவ்வைப்படுத்த எண்ணியுள்ளனர். இக்கட்டுப்பாட்டை மீறிச் சிலர் மலையின் மேற்புறம் ாறிவந்து, காவலர் அறியாமல் குளிக்கின்றனர். வெற்றிக் களிப்பும் அடைகின்றனர். இவரையெல்லாம் கொண்ட நாடு, உரிமை பெற்றுத் தன்னாட்சி செலுத்தும் நாடென்ற பெயர் பெறுமா ? “சட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழும் மக்களைக் கொண்ட வரையறுக்கப்பட்ட நிலமே நாடு எனப்படும்” ான்று அரசியற் கலை வல்லுநரான வில்சன் என்ற பெருமகனார் கூறியுள்ளார். நம் நாட்டுப் பெருமக்கள் மட்டுங்கூறாது விடுத்தனரா? கூறினர்; அழகிய பாவடிவிலே. நாம்தான் அவற்றையெல்லாம் உன்னுவதில்லை. முன் ஒருமுறை உனக்கு எழுதியுள்ளேன், "எவ்வழி நல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே' என்ற ஒளவையின் பொன் மொழியை, சட்டத்திற்குட்பட்டு வாழும் நல்லவர்களைக் கொண்ட நாடுதான் நாடெனப்படும். அதனால் சட்டத்தை மீறாமல் நீங்களும் அங்கு நடந்து கொள்ள வேண்டும். நேரம் ஆகிறது. அடுத்த மடலில் இது பற்றித் தொடர்ந்து எழுதுவேன். உன் தந்தை, 19.08.1956 முடியரசன்