பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 退須リ線 தகஜ 酸须 %須。 – அன்புள்ள அரசு, சென்ற மடலின் தொடர்ச்சியாகக் குற்றாலம் பற்றியே இம்மடலிலும் எழுதுகிறேன். குற்றாலத்தில் மேற்கே ஏறக்குறைய இரண்டரைக்கல் தொலைவில் அய்ந்தருவி என்றோர் அருவியும் உண்டு. அங்குச் செல்லும் வழியில் காலஞ் சென்ற டி.கே. சிதம்பரநாத முதலியார் அவர்களுடைய இல்லமும் காணப்படும். 'பொதியமலைப் பதிப்பகம்’ என்றெழுதிய பலகையொன்று அவ்வில் லின் முன் புறந் தொங்கும். அய்ந்த ருவிக்குச் செல்வோர் செல்வராக இருந்தால் மகிழுந்திற் செல்வர். நடுத்தர வகுப்பினர் மாட்டு வண்டியில் ஊர்வர். நாங்களோ நடந்தே சென்றோம். ஊர்திகளிற் செல்வோர் இயற்கை வளங்களை முழுமையாகக் கண்டு களிக்க இயலாதல்லவா ? அதனால் நாங்கள் நடந்தே சென்றோம். நீங்களும் பலராகச் செல்வதால் நடந்து செல்வது மகிழ்ச்சியாக இருக்கு மென்று கருதுகின்றேன். ஆயினும்