உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_கவியரசர் ឃ្លាទ៩-L 55) --- நாளொன்றுக்கு அய்ந்து முறையேனும் நீராடுவேன். ஒவ்வொரு முறையும் நிறைய எண்ணெய் தேய்த்துக் கொள்வேன். வீட்டில் எண்ணெய் முழுக்குக்குத் தேய்த்துக் கொள்வதைவிட அதிகமாகவே தேய்த்துக் கொள்வேன். அருவியில் நின்று மீண்டால் தலை முடி பஞ்சு போலாகி விடும்; உடல் அப்பழுக்கின்றி மிளிரும்; எண்ணெய்ப்பசை சிறிது கூடக் காண ல் முடியாது. இவ் வருவியில் நீராடுவோர் சிலர், சோப்புத் தேய்த்துங் குளிக்கின்றனர். நாகரிகம் என்று கருதுகின்றனர் போலும், அருவியில் நீராடுவோர் தேய்த்துக் கொள்ள எதையுமே பயன்படுத்த வேண்டியதில்லை. உடல் அவ்வளவு தூய்மையாகிவிடும். நான் பன்முறை நீராடிப் பயன் பெற்றது போல நீயும் உன் தோழர்களும் பன்முறை நீராடிப் பயன் பெறுங்கள். பேருக்குத் தலைகாட்டி மீளாதீர்; நான் அருவிகளிற் பலகால் நீராடித் தென்றலிலும் மூழ்கினேன். அதனால் மெய் யின்பம் பெற்றேன். அருவிநீர் பருகி, ஆண்டுக் கிடைக்கும் கனியருந்தி வாய் இன்பம் பெற்றேன். அருவியும், மலையும், மலைதவழ் முகிலும் பிறவுங்கண்டு கண் இன் பங் கொண்டேன். வண்ண மலர்களை வருடிவரும் காற்றை முகர்ந்து மூக்கின்பம் பெற்றேன். அருவியோசை, வண் டொலி, சோலை விளைக்கும் இன்னிசை இவற்றைக் கேட்டுச் செவியின்பம் பெற்றேன். இவ்வாறு அய்ம்புல இன்பம் பெற்றுத் தொடர் மலைக் கெதிரில் இருக்கும் சிறிய குன்றின் மீதமர் வேன். கண்ணுக் கெதிரில் பெருமலையும் மலை வீழருவியும் தோன்றும். மெல்லிய பூங்காற்று உடலில் தோயும். அவ்வின்பம் மாந்தி அப்படியே கண்மூடி மவுனியா வேன். அடடா ஒரே இன்பமயம்! பேரின்பமயம்! அவ்வின் பத்தில்