பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(84 F - T – அன்புள்ள இளவரசனுக்கு ...] 'தொண்டா ? யாருக்குத் தொண்டு ? யாருக்காக மலர் ? இந்த முதுமையிலும் உனக்குள்ள கடமை யுணர்ச்சியைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன் தாயே. உன் த ைல வ னு க்கு உன் மீது இரக்கம் வர வில்லையா ? மூப்படைந்த உன்னை மலர் கொண்டு வரச் சொல்கிறானே ? 'இர க்கம் இல்லாமலா இருக்கிறான் ? அவன் கருணைக் கடலாயிற்றே! அவனா மலர் கேட்கிறான் ! நான் விரும்பிக்கொண்டு செல்கிறேன். இந்தக் காலை மலரைத் தொடுத்து அந்தக் கண்ணனுக்குச் சூட்டி என் கண் குளிரக் காண்கின்றேன். மனம் குளிர்கின்றேன். அந்தக் குளிர்ச்சி என் தளர்ச்சியையெல்லாம் போக்கி விடுகிறது தம்பி ! இந்தத் தொண்டு என் மனமுவந்த தொண்டு. அவனுக் கன்றி வேறு யாருக்குத் தொண்டு செய்யப் போகின்றேன் ? என்று அந்த முதிய வள் பே சிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு, ‘பாட்டி எம்பெருமானுக்கா இம் மலர் மாலை ? ஆ ! ஆ ! உன் உள்ளமும் அன்பும் என்னே! என்னே எவருக்கு இத்துளய தொண்டுள்ளம் வாய்க்கும் ? நின் பெருமையே பெருமை!’ என வியந்து கூறி, இப் பேருள்ளம் உடையவ ளுக்கோ இம் முதுமை ? என எண்ணியவராய் இனிய பாடல் ஒன்று பாடிக் கைகுவித்து நின்றார். நரை மறைந்தது; கூன் நிமிர்ந்தது; நடுக்கம் நின்றது. முதுமை ஒழிந்தது. இளமை உருவெடுத்தது. முதிய வள் இளம் பெண்ணாக அங்கு நின்றாள். அவளுக்கே தன்னை நம்ப முடியவில்லை. மீண் டும் தன்னை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். விந்தையினும் விந்தையாக இருந்தது அவளுக்கு.