பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவியரசர் முடியரசன் - பூக்குடலையுடன் வெளி வருவாள். நாள் தவறாமல், தன் தள்ளாடும் பருவத்திலும் நடுங்கிக் கொண்டே தளர் நடையோடு பூக்குடலையுடன் செல்வதைப் பலமுறை அன்ப ரொருவர் பார்த்துக் கொண்டே வந்தார். பார்க்கும் போதெல்லாம் அய்யோ பாவம்! வயிற்றுப் பாட்டுக்காக இந்தப் பருவத்திலும் இப்படிப் பாடுபடுகின்றாளே ? இவளுக்கு உற்ற துணை ஒருவரும் இலர் போலும் ! என்று தமக்குள்ளே எண்ணி வருந்துவார் அந்த அன்பர். வழக்கம் போல், மூதாட்டி ஒரு நாள் குடலையுடன் பூங்கா விலிருந்து வெளிப்பட்டு வந்தாள்; கோலூன்றிய வண்ணம் தட்டுத்தடுமாறி, தளர் நடையினளாய் வந்து கொண்டிருந்த அவள் எதிரில் அந்த அன்பரும் தற்செயலாக வந்து கொண்டிருந்தார். சோர்ந்து ஒரு பக்கத்தில் அமர்ந்தாள் அந்த முதியவள். வந்த அன்பர் மனம் உருகி, 'மூதாட்டி உனக்கு உறுதுணை ஒருவரும் இலரோ ? இம் முப்பிலும் ஏன் இப்படியெல்லாம் அலைகின்றாய்? இந்த மலர்களையெல்லாம் எங்கெடுத்துச் செல்கின்றாய் ?” என்று பரிவுடன் வினவினார். 'அய்யா ! எனக்குத் துணை யார் இருக்கிறார்கள் ? அந்தத் தலைவன் தான் எனக்குத் துணை. இவ்வளவு காலத்தையும் ஒரு வகையாகக் கடத்திவிட்டேன். இன்னும் கொஞ்ச நாள், பிறகு கண்ணை மூடிவிடுவேன். அதுவரை அவனுக்குத் தொண்டு செய்யவேண்டும் என்றிருக்கின்றேன். ான்னால் முடிந்த தொண்டு இதுதான், அதனால் அவனுக்கு இதை எடுத்துச் செல்கின்றேன். என்று மூச்சை நிறுத்தி நிறுத்திப் பேசினாள் அந்த முதியவள்.