பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள அரசு, உன் மடல் பெற்றேன். இம் மடலிலும் ஒர் அய் எழுப்பியுள்ளாய். மிக்க மகிழ்ச்சி. இப்படித்தான் ஒவ்வொ றையும் கேட்டுக் கேட்டுப் புரிந்து கொள்ள வேண்டு. ஏன் ? எதற்கு ? எப்படி ? என்று வினவத் தொடங்குகிறா என்றால் உண்மையை அறியும் ஆவல் முளைவிடுகிறது என்று பொருள். ஆக உன் உள்ளத்தில் உண்மையுணரு நோக்கம் வேர் விடுகிறது. சிந்திக்கத் தொடங்கிவிட்டா என்பது தெரிகிறது. எத்தனை அய்யம் எழுப்பினும் விளக்குவது என் கடமை. விளக்குகிறேன் கேள். 'தமிழ், தமிழ் என்று சொல்லித் திரிவது குறுகிய மனப்பான்மையல்லவா ? நாம் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற விரிந்த மனப்பான்மையுடைய வர வாயிற்றே ! அவ்வாறிருக்க நாம் துவேச மனப்பான்மை கொள்வது சரியா ? என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.