பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| கவியரசர் முடியரசன் - 95 | முதலில் இது துவேச மனப்பான்மையன்று; அஃதாவது வெறுப்புணர்ச்சியன்று என்பதை நன்கு தெரிந்துகொள். குறுகிய மனப்பான்மையும் அன்று என்பதைப் பின்னர் எழுதுவேன். நீ தேர்வில் முதல்வனாக வெற்றி பெற வேண்டும்; முதற் பரிசிலும் பெறவேண்டும் ான்று எண்ணுகிறாய்; அதன் பொருட்டுப் பகலிரவு பாராது படிக்கின்றாய்; இது மற்ற மாணவர் மீது கொண்ட வெறுப்புணர்வா ? உன் வீட்டுக் கூரை மழையால் நீரொழுக்குக் காண்கிறது. பழுது பார்த்துக் கூரை வேய ாண்ணுகிறாய். திருடர் புகாவண்ணம் கதவிட்டுக் காப்புச் செய்கிறாய். இஃது அயல் வீட்டுக் காரர் மீது கொண்ட வெறுப்புணர்வா ? இது திருடன் மீது கொண்ட வெறுப்பா ? உன்னைப் பெற்றாளைப் பேணிக்காக்க முயல்கின்றாய் என்றால் மற்ற தாய்மாரை வெறுக்கின்றாய் ான்றா பொருள் ? நீ தேர்வில் முதல்வனாக வர விரும்புவது, உன் வீட்டைக் கதவிட்டுக் காப்பது, உன் அன்னையைப் பேணுவது எப்படி வெறுப்புணர்வு ஆகாவோ அப்படியேதான் உன் தாய்மொழி மீது பற்றுக் கொண்டு, அதனைப் பேணுவதும் தீங்கு நேரா வண்ணம் காப்பதும் வெறுப்புணர்வன்று. மேலும் இஃது இயல்பும் கடமையும் அறிவுடைமையும் ஆகும். வஞ்ச மனத்தர் இவ்வாறுதான் அந்த மனப்பான்மை, இந்த மனப்பான்மை, வெறுப்புணர்ச்சி என்றெல்லாம் கதை கட்டுவர், திசை திருப்புவர் அதனைக் கேட்டு அஞ்சி விடாதே ! நம்பியும் விடாதே! எண்ணியெண்ணிப் பார்! மற்றவரிடம் உசாவி உண்மையைத் தெரிந்துகொள்.