உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவியரசர் முடியரசன் கடித இலக்கியம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[35 - -T- -அன்புள்ள இளவரசனுக்கு o - - - பின்னர் ஒரு முடிவுக்கு வா. எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு' என வள்ளுவர் பெருந்தகை உலகுக்குக் கூறிய அறிவுரையை மறந்துவிடாதே. o நான் பயிலுங்காலத் தே, துவே ச மனப்பான்மை நிகழ்ச்சி யொன்று நடந்தது, அதனை இங்கே எழுதுகிறேன். கூத்தப்பன், சிகா கிரீசுவரன் என்னும் பெயர்களுடைய நண்பர் இருவர் அக்கல்லூரியிலே பயின்று வந்தனர். ஒரு நாள் சிகா கிரீசுவரன் கூத்தப் பனை நோக்கி, ஏங்காணும் உமக்கு இந்த பாஷைத் துவே ஷம் ? என்றார். 'எனக் கொன்றும் "துவே ஷ ம் இ ல் ைலயே ஏ ன் அப் படி ச் சொல்கிறீர்?’ என்று கேட்டார் கூத்தப்பன். “நடன சபாபதி” என்ற நல்ல பெயரை மாற்றிக் கூத்தப்பன் என்று பெயர் வைத்துக் கொண்டது துவேஷமில்லையோ ?” என்று மேலும் ஒரு வினாத் தொடுத்தார் சிகா கிரீசுவரன். “என்ன ஐயா இதுவா துவேஷம் ? என் மொழியில் என் பெயரை வைத்துக் கொண்டது துவேஷம் என்றால் இந்தக் கொடு மை யை எங்கே போய் ச் சொல்வது ? அவனவன் அவனுடைய தாய்மொழியில் பெயர் வைத்துக் கொள்ளத்தானே விரும்புவான் ? இதுவரை நாம் எப்படியோ வாழ்ந்து விட்டோம். இனியாவது நாம் தமிழராக வாழ விரும் புதல் குற்ற மா ?” என்று மனம் வருந்தி மறு மொழி தந்தார் கூத்தப்பன். அப்பொழுதும் சிகா கிரீசுவரன் விடுவதாக இல்லை. மேலும் மேலும் எள்ளலாகவும் உரத்தும் பேசிக் கொண்டிருந்தார் அதற்குமேல் என்னால் உணர்ச்சியைத் தாங்கிக் கொள்ள