பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

நெடுமான் அஞ்சியின் முன்னோர்கள் தேவர்களைப் போற்றிக் கரும்பினை அத்தெய்வலோகத்திலிருந்து கொணர்ந்து தமிழ் நாட்டில் பயிரிட்டவர்கள். இது நமக்கு ஒரு சிறந்த பேறு அன்றோ ? அதிகமான் நெடுமான் அஞ்சியின் முன்னோர் விண்ணுலகினின்று விண்ணவரைப் போற்றி வேழக் கரும்பினைக் கொண்டு வந்திலர் எனில், இக்குவின் இயல்பை யாம் அறிந்திருக்க இயலாதல்லவா? அத்தேவர்களும் அஞ்சியின் மூதாதையர்களின் அன்புடைமைக்குப் பெரிதும் ஈடுபட்டவர்களாய் அவர்கள் நேரே தாமே வரங்கொடுத்துச் செல்வதற்கு வந்து தங்கிய பூங்கா ஒன்று, அதிகமானது நாட்டில் இருந்ததாகவும் இலக்கியத்தில் பேசப்படுகிறது. இவன் “மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு” என்பதற்கிணங்கப் பிள்ளைப் பேற்றினையும் சிறக்கப் பெற்றவன். அப்பிள்ளையே பொகுட்டெழினி என்னும் பெயரினன்.


அஞ்சி ஒளவையார்க்கு நெல்லிக்கனி ஈந்தது

அஞ்சியின் கொடைக்குணத்திற்குச் சிறப்புடைய செயலாகக் குறிக்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி ஒளவையாருக்கு நெல்லிக்கனி ஈந்த கொடையேயாகும். நெல்லிக்கனி ஈந்தது ஒரு கொடைச் சிறப்போ என்று நீங்கள் கூறவும் கூடும்; எண்ணவும் கூடும். அந் நெல்லிக்கனியினை யார் உண்ணுகின்றனரோ, அவர்கள் நீண்ட காலம் நரை திரை மூப்பு அடைதல் இன்றி வாழ்வு நடத்த வல்லவர். அதனை அஞ்சி பெற்றதும் எளிய முறையில் அன்று; அருதின் முயன்றே அதனை அடைந்தனன் அக்