பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

உவமைக்கவிஞர் சுரதா


ஈசானம் - ஆளுதல்
தற்புருடம் - காத்தல்
அகோரம் - அழித்தல்
வாமதேவம் - விளக்கல்
சத்தியோசாதம் - தோற்றுவித்தல்

திருமறைக் காட்டிலே பகவன் என்று ஒருவனிருந்தான். சீரிய ஒழுக்கம் பெற்றவன். சோமன், சூரியன், அக்கினி என்ற மூன்று விழிகளையுடையவராயும், ஈசானம் (ஆளுதல்), தற்புருடம் (காத்தல்), அகோரம் (அழித்தல்), வாம தேவம் (விளக்கல்), சத்தியோ சாதம், (தோற்றுவித்தல்) என்கின்ற ஐந்து முகங்களையுடையவராயும், இராசத வடிவத்திற்றோன்றிய பிரமன், தாமத வடிவிற் றோன்றிய விஷ்ணு, சாத்வீக வடிவிற்றோன்றிய ருத்திரன் முதலியவர் ளுக்கு முதல்வராக வீற்றிருக்கின்ற சிவபெருமானை, நாடோறும் அன்போடு போற்றும் தன்மையை யுடையவன்.

நூல் : திருக்குடந்தைப் புராண வசனம் (1932) பக்கம் - 78
நூலாசிரியர் : பு, து, இரத்தினசாமி பிள்ளை
அப்பாசாமி - அண்ணல் தங்கோ (1932)
நவம் - புதுமை
சின்மயம் - ஞானவடிவு
பூரணம் - நிறைவு
பஞ்சவர்ணம் - ஐந்நிறம்
மங்கல சூத்திரம் - தாலிக்கயிறு
மாணிக்கம் - செம்மைமணி
மோக்ஷ மார்க்கம் - முத்திநெறி
நூல் : திருவருட்பா மூலமும் உரையும் நெஞ்சறிவுறுத்தல் (1932)
உரையாசிரியர் : மகாவித்வான் - சித்தாந்த ரத்நாகரம், அரன்வாயல் வேங்கட சுப்பிப்பிள்ளை.
Artesian Well – தானாகவே தண்ணீர் வெளியேறும் கிணறு

மகாமக வருடத்தில் நகரபரிபாலன சபையர் தண்ணிறைத்துச் சேறள்ளி மணலிட்டு வருகின்றனர். இவ்வருஷம் ஒரு தீர்த்தத்தில் தானாகவே தண்ணீர்