பக்கம்:தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

—10—

ஊர் இரண்டுபடுங்கால் உளவுள்ள கூத்தாடிக்குக்
காரியம் கைகூடுமாம் - சகியே காரியம் கைகூடு 47

நேர்பகையாளிஎன்னை நீசனென்றால் என்சுற்றத்
தார்என்னைத் தள்ளாரடி - சகியே சுற்றத்தார் என் 48

வீரமில் ஆரியரின் வீண்வாக்கை நம்பினால் நம்
காரியம் கைகூடுமோ? - சகியே காரியம் கை 49

ஆரியர் சொன்னவண்ணம் ஆண்டுபல கழித்தோம்
காரியம் கைகூடிற்றா? - சகியே காரியம் கைகூடி 50

எத்தால்வாழ் வுண்டாகும்நாம் ஒத்தால்வாழ்வுண்டாம் இஃது
சத்தான பேச்சல்லவோ? - சகியே சத்தான பேச்சல்லவோ 51

எத்தர்கள் பேச்சைநம்பி இரத்தக் கலப்பை நீக்கிச்
சத்தின்றி வாழ்வாருண்டோ? -- சகியே சத்தின்றி 52

ஆரியப் பேர்மறைந்தும் அவர்வைத்த "தீண்டார்" என்ற
பேர்நிற்றல் ஏதுக்கடி? -- சகியே பேர்நிற்றல் ஏதுக்கடி? 53

ஆரியர் பார்ப்பாரானால் அவர்சொன்ன தீண்டாதார்கள்
சேரியில் ஏன்தங்கினார்? - சகியே சேரியில் ஏன்தங்கி 54

ஊர் தட்டிப் பறித்திட உயர்சாதி என்பார் இஃதை
மார்தட்டிச் சொல்வேனடி - சகியே மார் தட்டிச் 55

ஓர் நட்டில் உயர்ந்தோர்மற் றொன்றில்தாழ்ந் தோரை இட்டுச்
சீர் தூக்கிப் பார்ப்போமடி - சகியே சீர் தூக்கிப் பார்ப்போமடி 56