தந்தையும் மகளும்/101

விக்கிமூலம் இலிருந்து


101அப்பா! அடுப்பில் தீ எரியும்போது சில வேளைகளில் தீ நீல நிறமாகத் தெரிகிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! எந்தப் பொருளும் எரிய வேண்டுமானால் அதற்குக் காற்று அவசியம் போதுமான காற்று இருந்தால் நன்றாகவும் விரைவாகவும் எரியும். போதுமான காற்று இல்லாவிட்டால் நன்றாக எரியாது. புகைந்து கொண்டே எரியும், காற்று கொஞ்சமும் இல்லாவிட்டால் எரியாமல் அணைந்து போகும். இது எல்லாம் நீ அறிவாய். தீ நன்றாக எரியாமல் புகையும் போது அதை நன்றாக எரியுமாறு செய்வதற்காகக் குழல் மூலம் ஊதுவார்கள், அல்லது விசிறி கொண்டு விசிறுவார்கள். போதுமான காற்று கிடைத்தால் விறகிலுள்ள கரி காற்றிலுள்ள பிராண வாயுவுடன் சேர்ந்து கரியமிலவாயுவாக ஆகும். அந்த வாயு கங்குடன் சேர்ந்து கார்பன் மானாக்ஸைட் என்னும் வாயு உண்டாகிறது. அதுதான் பிராணவாயுவுடன் சேர்ந்து நீல நிறமாக எரிகிறது.

அத்துடன் விறகில் இருப்பது கரி மட்டுமன்று வேறு பல பொருள்களும் உள. அவைகளும் வாயுக்களாக மாறுகின்றன. அவையும் பிராணவாயுவுடன் சேர்ந்து நீல நிறமாக எரியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/101&oldid=1538270" இலிருந்து மீள்விக்கப்பட்டது