தந்தையும் மகளும்/110

விக்கிமூலம் இலிருந்து


110அப்பா! மாமா வாங்கி வந்துள்ள கடிகாரத்தில் இருட்டில்கூட மணி தெரிகிறதே அதற்குக் காரணம் என்ன?

ஆமாம், அம்மா! சில கடிகாரம் இருட்டில்கூட மணி காட்டும். ஏதேனும் கண்ணுக்குத் தெரிய வேண்டுமானால்அதிலிருந்து ஒளி புறப்பட்டு நம்முடைய கண்ணுக்கு வந்துசேரிவேண்டும் என்று படித்திருக்கிறாய் அல்லவா? அப்படியானால் அத்தகைய கடிகாரத்தின் முட்களில் ஒளியேது, அதிலிருந்து ஒளி நம்முடைய கண்ணுக்கு வரவேண்டுமானால் கடிகாரத்துக்குள் சிறு விளக்கு ஏதும் வைத்திருக்கிறதோ என்று கேட்பாய்.

ஆனால் விளக்கு எதுவும் கிடையாது. அதற்குப்பதிலாக அந்த முட்களின் மீது போலோனியம் என்னும் ஒரு பொருளைப் பூசி இருக்கிறார்கள். அந்த வஸ்து ரேடியம் என்னும் வஸ்துவின் இனத்தைச் சேர்ந்தது. அந்த வஸ்துக்கள் சுயமாகவே பிரகாசம் உடையவை. அந்த வஸ்துக்களைக் கண்டுபிடித்தவர் பிரஞ்சு தேசத்தில் இருந்த பிரபல விஞ்ஞானியான கூரி அம்மையார். அவர் முதன் முதல் கண்டு பிடித்த வஸ்து போலோனியம் என்பது. அவருடைய சொந்த நாடு போலந்து. அதனால் அந்த வஸ்துவுக்குத் தம்முடைய நாட்டின் பெயரையே இட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/110&oldid=1538291" இலிருந்து மீள்விக்கப்பட்டது