தந்தையும் மகளும்/125

விக்கிமூலம் இலிருந்து


125அப்பா! தண்ணீர்பட்டால் கறையுண்டாகவில்லை, மைபட்டால் கறை உண்டாகிறது, அதற்குக் காரணம் என்ன?

ஆம் அம்மா! நீ எழுதும் போது உன்னுடைய பாவாடையில் மைக் கறை உண்டாய்விடுகிறது, அது உனக்கு வருததமாயிருக்கிறது. அதனால் தான் இதைக் கேட்கிறாய்.

தண்ணீரில் கறை உண்டாக்கக் கூடிய பொருள் எதுவும் கிடையாது. அதில் ஏதாவது கரைந்திருந்தால் தானே அது ஆவியாகப் போனபின் கரைந்திருந்த பொருள் தங்கிக் கறையுண்டாகும்? ஆகவே தண்ணீரினால் கறை உண்டாக்க முடியாது. ஆனால் அது சாயப்பொருள்களின் மீது விழுந்தால் அதன் சாயத்தைப் போக்கிவிடும். உன் புஸ்தகத்தின் அட்டை மீது தண்ணீர்பட்டால் அதன் சாயம் இளகிவிடுகிறதல்லவா?

ஆனால் மை பட்டால் கறை உண்டாவதற்குக் காரணம் அதில் நிறமுடைய இரும்பு உப்புக்கள் முதலிய பல பொருள்கள் கரைந்திருப்பது தான். உன்னுடைய பாவாடையில் மை பட்டால் அதிலுள்ள தண்ணீர் உலர்ந்து போனபின் அதில் கரைந்துள்ள சாயப் பொருள்கள் பாவாடையில் தங்கி கறையை உண்டாக்கி விடுகின்றன, அதனால் அம்மா! நீ எழும்போது மை கீறிப்போகாதபடி கவனமாக நடந்து கொள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/125&oldid=1538328" இலிருந்து மீள்விக்கப்பட்டது