தந்தையும் மகளும்/133

விக்கிமூலம் இலிருந்து


133அப்பா! யந்திரசாலைப் புகை போக்கியில் வரும் புகை அதிகக் கறுப்பாயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! அடுப்பில் விறகு எரியும்போது அதிலுள்ள கரி பிராணவாயுவுடன் சேர்ந்து கரியமில வாயுவாகவும், ஹைட்ரோஜன் பிராண வாயுவுடன் சேர்ந்து நீராவியாகவும் ஆகின்றன. கரியமில வாயுவும் நீராவியும் கறுப்பு நிறம் உடையன அல்ல. ஆனால் விறகிலுள்ள கரி எரிவுதற்கு வேண்டிய காற்று போதுமான அளவு கிடையாமற் போனால், அப்பொழுது அது நுண்ணிய தூள்களாக மேலே கிளம்பும். அதைத்தான் புகை என்று கூறுகிறோம்.

நிலக்கரி எரியும் போதும் அதற்குப் போதுமான பிராணவாயு கிடைக்குமானால், அது முற்றிலும் எரிந்து போகும், புகை உண்டாகாது. ஆனால் அப்படி நிகழ்வதில்லை. சிகாகோ நகரத்திலுள்ள யந்திரசாலைகளில் மட்டுமே ஆண்டுக்கு இரண்டு லட்சம் டன் நிலக்கரி புகையாகப் போகிறதாம். அந்தப் புகை அதிகக் கறுப்பாயிருப்பதற்குக் காரணம் நிலக்கரியிலுள்ள எண்ணெய்ச் சத்து ஆவியாகி கரித்தூளுடன் கலந்து வருவதேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/133&oldid=1538344" இலிருந்து மீள்விக்கப்பட்டது