தந்தையும் மகளும்/135

விக்கிமூலம் இலிருந்து


135அப்பா! கையில் சிவப்புமை பட்டால் சோப்பு அதை நீக்கிவிடுகிறது, ஆனால் சோப்பின் நிறம் மட்டும் மாறாமலே இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! உன் கையில் சிவப்புமை பட்டால் அந்தச் சிவப்பு மை உன் கையின் மேல்தோலில் தானே இருக்கிறது? அதனால்தான் சோப்புககொண்டு கழுவினால் சோப்பினால் அழுக்குப்போவது போல அந்த மையும் போய் விடுகிறது.

ஆனால் சோப்பிலுள்ள நிறம் அதன மேலாகப் பூசி வைக்கப்பட்டதாக இல்லை. அத்துடன் சேர்த்தே செய்யப்பட்டிருக்கிறது. அது உள்ளும் புறமும் சகல பாகங்களிலும் கலந்திருக்கிறது. அதனால்தான் அதை நீக்க முடியவில்லை.

அம்மா! உன் முகத்தில் மஞ்சள் பூசினால் அதைக் கழுவி முகத்தில் மஞ்சள நிறமில்லாமல் செய்துவிடலாம். ஆனால் உன் தங்கக் காப்பை எவ்வளவு தண்ணீர்கொண்டு கழுவினாலும் அது மஞ்சள் நிறம் மாறுமா, மஞ்சளாகவே தானே இருந்து கொண்டிருக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/135&oldid=1538346" இலிருந்து மீள்விக்கப்பட்டது