தந்தையும் மகளும்/144⁠

விக்கிமூலம் இலிருந்து


144அப்பா! அடுப்பெரிக்க அடுப்புக் கரியைவிட நிலக்கரியே நல்லது என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! எந்தப் பொருளை எரித்தாலும் அதிலிருந்து கிடைக்கும் உஷ்ணத்தைவிட அதிகமான உஷ்ணம் ஹைட்ரோஜன் என்னும் வாயுவை எரித்தால் கிடைக்கும் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் ஹைட்ரோஜனை எளிதில் பெறமுடியாது.

ஆயினும் அந்த ஹைட்ரோஜன் ஓரளவு நிலக்கரியிலும் இருக்கிறது. அத்துடன் அதில் கரியும் இருக்கிறது. அந்தக் கரி கொஞ்சம்கூட நீர் இல்லாததாகவுமிருக்கிறது. அதனால் அதிலுள்ள கரி முழுவதும் எரிந்து அதிகமான உஷ்ணத்தைத் தருகிறது.

அடுப்புக் கரியை எவ்வளவு நன்றாக உலர வைத்தாலும் அதில் ஓரளவு நீர் இருக்கவே செய்யும். அதனால் அது கரியை நிலக்கரி போல் அதிக உஷ்ணமாக எரியவிடாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/144⁠&oldid=1538372" இலிருந்து மீள்விக்கப்பட்டது