தந்தையும் மகளும்/147

விக்கிமூலம் இலிருந்து


147அப்பா! மரச் சாமான்களுக்கு வர்ணம் பூசுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மரச் சாமான்களுக்கு வர்ணம் பூசினால் அழகாயிருக்கிற தல்லவா? ஆனால் அதற்காக மட்டுமே வர்ணம் பூசுகிறார்கள் என்று எண்ணாதே. சன்னல்களும், கதவுகளும் அழகாயிருந்தால் மட்டும் போதாது, கெட்டுப் போசாமலும் இருக்க வேண்டும்.

ஆனால் காற்றிலுள்ள நீராவி முதலியவை மரத்தைக் கெடுத்துவிடக் கூடியவை யாகும். அதனால் அவை மரத்தில் சேர வொட்டாமல் தடுக்கவேண்டும். அப்படிச் செய்தால் தான் மரச் சாமான்கள் கெட்டுப் போகா.

அம்மா! வர்ணம் என்பதில் உள்ள தாய்ச் சரக்கு ஈய வெள்ளை என்பதாகும். அதோடு நிறச்சாயங்கள் சேர்த்தால் பல நிறமுடையதாகும். அதன்பின் அத்துடன் யாளிவிதை நெய்யையும் டர்ப்பெண்டைன் என்னும் கர்ப்பூர நெய்யையும் சேர்ப்பார்கள். கர்ப்பூர எண்ணெய் வர்ணத்தை உலரும்படி செய்ய உதவுகிறது. வர்ணம் உலரும் போது யாளிவிதை நெய்யானது காற்றிலுள்ள பிராண வாயுவுடன் சேர்ந்து வர்ணத்தின்மீது பிசின் போல் படிந்து விடுகிறது. அதுதான் மரத்தைப் பாதுகாத்துத் தருகிறது. ஆகவே வர்ணம் அழகையும், யாளிவிதை நெய் பாதுகாவலையும் அளிக்கின்றன என்று கூறலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/147&oldid=1538411" இலிருந்து மீள்விக்கப்பட்டது