தந்தையும் மகளும்/52

விக்கிமூலம் இலிருந்து


52அப்பா! வஸ்துக்களைச் சூடாக்கினால் விரியும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா ! ஒவ்வொரு வஸ்துவும் கண்ணுக்குத் தெரியாத கோடிக் கணக்கான மூலக்கூறுகளால் ஆனதாகும். அந்த மூலக்கூறுகள் சதா காலமும் அசைந்து கொண்டே இருக்கின்றன. நாம் வஸ்துவைச் சூடாக்கினால் என்ன நடக்கிறது? வஸ்துவிலுள்ள மூலக்கூறுகள் முன்னிலும் அதிகமாக அசைய ஆரம்பித்து விடுகின்றன. அதிகமாக அசைய வேண்டுமானால் அவற்றிற்கு அதிகமாக இடம் வேண்டும் அல்லவா? அப்படி அதிகமான இடத்தில் அசைவதால் தான் நாம் வஸ்துவானது சூட்டால் விரிந்து விடுகிறது என்று கூறுகிறோம்.

அதுபோலவே வஸ்துவின் சூட்டைக் குறைத்துக் குளிர்வித்தால் அப்போது மூலக்கூறுகள் அசைவது குறைந்து விடுகிறது. அதனால் அவை அசையும் இடமும் குறைந்து விடுகிறது. அப்போது வஸ்து சுருங்கி விட்டதாகக் கூறுகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/52&oldid=1538156" இலிருந்து மீள்விக்கப்பட்டது