தந்தையும் மகளும்/66

விக்கிமூலம் இலிருந்து


66அப்பா! மோட்டார் காரில் டிரைவருக்கு முன் வலது பக்கத்தில் ஒரு சிறு கண்ணாடி இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மோட்டார் காரில் போகும் போது பின்னால் வருகிற வண்டிகள் வந்து மோதிவிடக் கூடாது அல்லவா? பின்னா வரும் வண்டி அதிக வேகமாக வந்தால் விலகி நின்று அதற்கு வழி விடவேண்டும் அல்லவா? ஆனால் அப்படிப் பின்னால் வரும் வண்டி சப்தம் கொடாமல் வருமானால் அது வருகிறது என்று எப்படி அறிய முடியும்?

அதைத் தெரிந்துகொள்வதற்காகவே டிரைவருக்கு முன்னால் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று காணப்படுகிறது. அது வெளி வளைந்த வில்லையால் ஆனது. அதில் காணும் பிம்பம் எப்பொழுதும் சிறியதாய் இருக்கும். ஆனால் பின்னால் வரும் வண்டி அருகில் வரவர அதன் பிம்பம் பெரிதாகிக் கொண்டே வரும். அத்துடன் அது உள்ளே இருந்து வெளியே வருவது போலவும் தோன்றும். இதைக் கொண்டு வண்டி ஓட்டுபவர் பின்னால் வரும் வண்டி எவ்வளவு தூரத்தில் வருகிறது என்பதை அறிந்து கொள்வார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/66&oldid=1538202" இலிருந்து மீள்விக்கப்பட்டது