தந்தையும் மகளும்/86

விக்கிமூலம் இலிருந்து


86அப்பா! இயந்திர சாலைகளில் உள்ள புகை போக்கி அதிக உயரமாயிருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! நாம் வீட்டில் அடுப்பில் விறகு வைத்து எரிப்பது போலவே இயந்திர சாலைகளிலும் விறகோ நிலக்கரியோ எரிக்கிறார்கள். விறகு எரிந்தாலும் நிலக்கரி எரிந்தாலும் அது காற்றிலுள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து கரியமிலவாயு ஆகிறது. அத்துடன் எரிக்கும் விறகும் கரியும் முற்றிலும் எரிந்து விடுவதில்லை. ஒரு பாகம் எரியாமல் புகையாகப் போகின்றது. கரியமில வாயுவும் புகையும் நமக்கும் பிராணிகளுக்கும் நல்லதில்லை. மரங்களையும் கரியாக்கி அழகில்லாமல் செய்துவிடும். அதனால்தான் . மிகவும் நீண்ட புகைபோக்கிகள் கட்டி புகையையும் கரியமில வாயுவையும் மேலே போகும்படி செய்கிறார்கள். அவைகள் அங்குள்ள காற்றோடு கலந்து விடுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/86&oldid=1538248" இலிருந்து மீள்விக்கப்பட்டது