பகுப்பு:பத்துப்பாட்டு

விக்கிமூலம் இலிருந்து

பெரும்பாணாற்றுப்படை

பத்துப்பாட்டுத் தொகைநூலினுள் நான்காவதாக அமைந்த பாடல் இது. இப்பாடலுக்கு முன்னுள்ள பாடல்கள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை என்ற மூன்றாம். இப்பாடலின் ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் ஆவார். இவர் கடியலூர் எனும் ஊரைச்சார்ந்தவர். ஆகவே, இவரைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்று அழைப்பர். இந்நூலின் பாட்டுடைத்தலைவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவான். இந்நூல் ஆசிரியப்பாவால் ஆனது. பெரும்பாண் என்பது, பெரிய பாண் அதாவது, பெரிய பாட்டு என்பதாம். பாண் = பாணர், பெரும்பாணர்; அதாவது, பெரிய யாழைக் கையில் வைத்து இசைப்போர் பெரும்பாணர் என்று அழைக்கப்பட்டனர். பெரியயாழ் என்பது பேரியாழ் என்று சுட்டப்பெறும். பெரும்பாணனைப் பெரும்பாணன் ஆற்றுப்படுத்துவது, பெரும்பாணாற்றுப்படை ஆகும். இந்நூலினுள், "புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண" (அடி,22.) எனப் பாணனை அழைத்துக் கூறுவதைக் காணலாம். இப்பாடல் அகம், புறம் எனும் இருவகையினுள் புறப்பாடல் எனும் வகையினைச்சார்ந்தது. அகப்பாடல் அல்லாதது, புறப்பாடல் ஆகும். இவ்வாறு அகம், புறம் எனப் பாடல்களைப் பகுப்பது, உலகில் தமிழருக்கே உரியது: வேறு எந்த இலக்கிய மரபிலும் இவ்வாறு இல்லை. இவ்வாறு பகுப்பதனைத் திணை என்று சுட்டுவர். திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள். அகம் எனப்படுவது அக ஒழுக்கம், புறம் எனப்படுவது புறஒழுக்கம். இதன்துறை ஆற்றுப்படை. திணையின் உட்பிரிவு துறை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பகுப்பு:பத்துப்பாட்டு&oldid=1403892" இலிருந்து மீள்விக்கப்பட்டது