பக்கம்:அண்ணா காவியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அறப்போர்க்காதை
107

மக்களது கிளர்ச்சிக்கு மண்டி யிட்டு
மமதை உள்ள ஆட்சியாளர் விடுவித் தாலும்...

சிக்கலொன்று நேர்ந்ததது சிரிப்பு மாகும்!
சிறையினின்று வெளிவந்த அண்ணா செல்லத்

தக்கவாறு வண்டிதர மறந்தார் தோழர்!
தந்தைக்கு வந்திருந்த ஊர்தி ஏறி,

மிக்கவொரு சங்கடத்தை வென்று மீண்டார்!
வேறுகட்சித் தலைவரைப்போல் நடந்து கொண்டார்.




அடுத்துவந்த ஆண்டுகளில் போராட் டந்தான்!
ஆணவத்தில் ஆடிவந்த ஆட்சி யாளர்

கெடுத்துவந்தார், எழுதுதற்குப்-பேச-எண்ணக்
கிட்டியநற் சுதந்திரத்தை! அதையெ திர்த்துத்

தொடுத்துவிட்டார் அறப்போரைத் தடையை மீறித்,
துவளாமல் நாடெங்கும் தோழர் சென்று

விடுத்தனரே அறைகூவல்? நாட கத்தில்
வேடமிட்டுக் கைதானார்! அண்ணா வென்றார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/109&oldid=1079758" இலிருந்து மீள்விக்கப்பட்டது