பக்கம்:அண்ணா காவியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அண்ணா காவியம்


இங்கர்சால் அமரிக்க நாடு கண்ட
இணையற்ற பகுத்தறிவு வாதி! அன்னார்

எங்கேனும் சொற்பொழிவு நிகழ்த்தச் சென்றால்...
எத்தனையோ பொற்காசு கொடுத்தும் கேட்பர்!

இங்கதுபோல் கட்டணத்தைச் செலுத்தி, அண்ணா,
எண்ணில்லாத் தம்பியரின் பேச்சைக் கேட்கும்

மங்காத புதுமரபை வகுத்துத் தந்தார்:
வரையாது வழங்கிவந்தார் மக்கள், செல்வம்!




வெறுங்கையை வீசி வந்த கழகத் தார்க்கு
வீடொன்று; 'நம் நாடு’ நாள்தாள் ஒன்றாம்!

நறுந்தொகையைத் திரட்டுதற்கோ முதல்மா நாடு!
நம்முதவி நாடிவரும் தேர்தல் நாளில்...

உறும்புதிய வேட்பாளர் நமது கொள்கை
ஒவ்வுமெனக் கையெழுத்துச் செய்து தந்தால்...

எறும்பனைய சுறுசுறுப்பாய் எங்கள் தோழர்
இயங்கிடுவர்" என்றிட்டார்; வெற்றி கண்டார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/110&oldid=1079760" இலிருந்து மீள்விக்கப்பட்டது