பக்கம்:அண்ணா காவியம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

அண்ணா காவியம்


அலையாப் பண்பும் அடிப்படைத் தேவை!

பட்டா ளத்தினர் கட்டிக் காத்திடும்

கெட்டிக் குணமே கட்டுப் பாடாம்!

இந்தப் படையினில் என்னை இணைத்திடும்

சிந்தனை மட்டும்என் சொந்த விருப்பம்;

செருமுனை சேர்ந்தபின் அருமைத் தலைவன்

தருமோர் ஆணையைத் தட்டாது கேட்டலே

முறையாம்; முயன்றும் முடியா விடிலோ

விரைவாய் உயிரை விடுதலே நெறியாம்!

இருப்பதோ ஓர்உயிர்; ஏகப் போவதும்

ஒருமுறை தான்; அஃது உயர்வாய்ப் போகலாம்!


"மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்!”

போற்றார் யார்இப் புனிதநன் மொழியை?

"எங்கிருந் தாலும் வாழ்க" என்பதும்

மங்காது "வாழ்க வசவாளர்” என்பதும்

எப்பொருள் யார், யார்வாய்க் கேட்பினும்

அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவென

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/168&oldid=1080271" இலிருந்து மீள்விக்கப்பட்டது