உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணா காவியம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்திப் பரணி

57

புறப்பட்டார் தலைநகராம் சென்னை நோக்கிப் :புலித்தமிழர் போர்க்குணத்தை நாடு காண!

அறப்படையை வழியெங்கும் வாழ்த்த லானார்!
அஞ்சாநெஞ் சன்மறவன் அழகர் சாமி

சிறப்புடனே எதிர்ப்புகளைத் துச்ச மென்று
சேனைதனைக் கால்நடையாய் நடத்தி வந்தான்!

மறப்பரிய மாவீரர் புகழைப் பாடி
மாத்தமிழர் அண்ணாவும் வரவேற் றாரே!




இந்தியினை எதிர்க்கின்ற போராட் டத்தை
ஏற்காத தேசியத்தார் முகாமை விட்டு

வந்துவிட்டார் நடராசன்! மனைவி யோடு
மறியலிலும் ஈடுபட்டார்! அண்ணா வுக்கும்

தந்தனரே ஆறுதிங்கள் சிறைவா சந்தான்
தமிழ்க்குலத்தார் ஈராயி ரம்பேர் சென்றார்!

வெந்துயரைத் தருஞ்சிறையைச் சோலை யாக்கி, :வீரகாதை இயற்றினரே! முதலாம் போரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/59&oldid=1078730" இலிருந்து மீள்விக்கப்பட்டது