பக்கம்:அண்ணா காவியம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மாணாக்கர் இலம்பகம்


ஆங்காங்கு பெரியாரைப் பயின்ற தாலும்,
அண்ணாவின் விளக்கவுரை உணர்ந்த தாலும்

பாங்காகக் கல்விபெறும் மாணாக் கர்கள்
பகுத்தறிவுக் கொள்கையின்பால் மனம்செ லுத்தித்

தூங்காது விழிப்புற்றுக், கிளர்ந்தெ ழுந்த
துடிப்பினையே அண்ணாவும் புரிந்து கொண்டு

நீங்காமல் அவரருகே நெருங்கி வந்து
நீடித்த பயன்பெறவே திட்ட மிட்டார்!




அண்ணாம லைச்செட்டி யாரின் அன்பால்
அமைந்துள்ள பல்கலைசேர் கழகந் தன்னில்...

அண்ணாவும் சொற்பொழிவு நிகழ்த்த வந்தார்: :அதன்மூலம் வரலாறு புதிதாய்க் கண்டார்!

நண்ணாமல் ஒதுங்கிநின்றார் நாடிச் சென்றே :நயந்திட்டார்: நமதியக்க மாண வர்கள்

கண்ணான அண்ணனையே மொய்த்துக் கொண்டார்!
காலத்தைச் சரியாகக் கணித்தார் அண்ணா!

அ.-5 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/67&oldid=1078996" இலிருந்து மீள்விக்கப்பட்டது