பக்கம்:அண்ணா காவியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அண்ணா காவியம்


குடந்தையிலே திராவிடத்து மாண வர்கள்
கூடுமொரு சிறப்புமிக்க முதல்மா நாடு

நடந்தததில் அண்ணாவும் பங்கு பெற்றே,
நலமுடனே, திராவிடர்யார்? ஆரி யர்யார்?

உடந்தையாகத் தமிழருமே தமிழ ழிக்க
ஒத்துழைத்த தீங்கென்ன? என்ப தாகக்

கடந்தகால நிகழ்ச்சிகளை நிரலாய்க் கூறிக்
கண்திறக்க வழிசெய்தார் திறமை யோடு!



பெரியாரை அழையாமல் அண்ணா காட்டும் :பெரியாரின் பாதையிலே செல்வ தற்குச்

சரியான நேரத்தில் முன்வந் திட்ட
தமிழ்நாட்டு மாணவரை இட்டுச் செல்ல

உரியாராம் அண்ணாவும் அய்யா வின்பால்
உரைத்திட்டார்: பெரியாரும் ஈரோட் டில்ஒர்.

அரிதான பயிற்சிமுகாம் அமைத்து விட்டார்:
அனைவர்க்கும் அன்பழைப்பும் விடுக்கச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/68&oldid=1079001" இலிருந்து மீள்விக்கப்பட்டது