பக்கம்:அறநூல் தந்த அறிவாளர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2. திருக்குறள் அருளிய தெய்வப் புலவர்

உலகப் பொது மறை

தமிழில் தோன்றிய அறநூல்கள் பலவற்றிலும் தலைமை வாய்ந்தது திருக்குறள் என்னும் தெய்வ நூலே ஆகும். அந்நூல் உலகிலேயே தலைசிறந்த அறநூல் என்று உயர்வாகக் கொண்டாடப் பெறும் சிறப்புடையது. ஆதலின் 'உலகப் பொது மறை’ என்றே கற்றறிந்தோர் அந்நூலை உவந்து போற்றுவர். எந்த நாட்டினரும் ஏற்றுப் போற்றும் இனிய நீதிகளைச் சிறிய பாட்டுக்களால் அரிய முறையில் விளக்குவது அந்நூல்.

திருக்குறள் தமிழ் வேதம்

இரண்டு அடிகளுக்குக் குறைந்த பாடல், நம் இனிய தமிழ் மொழியில் இல்லை. ஆதலின் இரண்டு அடிகளால் ஆகிய சிறிய பாட்டைக் 'குறள்' என்று புலவர் குறித்தனர். அத்தகைய குறட்பாக்களால் ஆக்கப்பெற்ற அறநூலைக் 'குறள்' என்றே கூறினர். இந் நூலின் உயர்வை அறிந்த முன்னோர் திருக்-