பக்கம்:அறப்போர்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோட்டிடை வைத்த கவளம்


எப்படித் தவறாகும்? ஒரு நாள் வந்தவர் மீட்டும் வந்தால் நம்மிடத்தில் அவருக்குள்ள ஆழ்ந்த அன்பைத்தானே அது காட்டும்?" என்று சொல்லி அன்றும் அப் புலவருக்குப் பரிசில் வழங்கினான் அதியமான். மூன்றாவது நாளும் அந்தப் புலவர் வந்தார். மறுபடியும் அவருக்குப் பரிசில் கிடைத்தது. ஔவையார் இதைக் கண்டார். கொடுக்கச் சலியாக் குணக்குன்றாக நிற்கும் அதியமானுடைய வண்மையை நினைந்து நினைந்து உருகினார்.

நான்காவது நாளும் அந்தப் புலவர் வந்தார். ஆனால் இந்த முறை வேறு பல புலவர்களையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். ஒரே கூட்டம். புலவர் பல நாள் வந்து செல்வதைப் பொறாமல் குறைகூறியவர். இப்பொழுது இந்தக் கூட்டத்தைக் கண்டு பிரமித்துப் போய் விட்டார். “என்ன அநியாயமாக இருக்கிறது? கரும்பு ருசி யென்று வேரோடு பிடுங்கலாமா? ஊரிலுள்ள இரவலர்களை யெல்லாம் இந்த மனிதர் கூட்டிக்கொண்டு வந்து விட்டாரே!” என்று முணுமுணுத்தார்.

அதியமான் என்ன செய்தான்? புலவர் கூட்டத்தைக் கண்டவுடன் அவனுக்கு அளவற்ற ஊக்கம் உண்டாகிவிட்டது. முதல் நாளில் அந்தப் புலவருக்கு எவ்வளவு அன்போடு

97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/115&oldid=1267487" இலிருந்து மீள்விக்கப்பட்டது